யாழ். தென்மராட்சி எழுதுமட்டுவாழ் பகுதியில் 16 கிலோ கஞ்சா மீட்பு 1
#drugs
#Drug shortage
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
Kanimoli
2 years ago

யாழ். தென்மராட்சி எழுதுமட்டுவாழ் பகுதியில் 16 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.குறித்த கஞ்சாவை நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் மீட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த விசேட தகவலையடுத்து மோட்டார் சைக்கிள் ஒன்றை சோதனையிட்ட போது குறித்த கஞ்சா மீட்க்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து சந்தேக நபர் தப்பி ஓடிய நிலையில், அவரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.



