இரண்டாவது நாளாக தொடரும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களது பணிப் புறக்கணிப்பு!
#University
#strike
#Student
#College Student
#Protest
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
Kanimoli
2 years ago

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.
நியாயமற்ற வரிக்கொள்கைக்கு எதிராக தொழிற்சங்கங்களின் தொழிற்சங்கத்தினால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையுடன் இணைந்து இந்த வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.
தமது பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக அனைத்து பல்கலைக்கழக நடவடிக்கைகளும் தடைப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஷியாம் பன்னஹக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வரிக்கொள்கைக்கு எதிராக எதிர்வரும் 13ஆம் திகதி முதல் பல்வேறு தொழிற்சங்கள் இணைந்து தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன.
இந்த தொழில் நடவடிக்கையில் 40க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொள்கின்றனர்.



