பிணைமுறி வழக்குகளில் இருந்து ரவி கருணாநாயக்க விடுதலை

இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகளை இனியும் நீடிக்க முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
இரண்டு உயர்நீதிமன்ற வழக்குகளையும் சவாலுக்கு உட்படுத்தி ரவி கருணாநாயக்க சமர்ப்பித்த இரண்டு மனுக்கள் மீதான தீர்ப்பை வழங்கி மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழு இந்தத் தீர்மானத்தை வழங்கியுள்ளது.
2016 ஆம் ஆண்டு மார்ச் 29 மற்றும் 31 ஆம் திகதிகளில் மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட இரண்டு பிணைமுறி ஏலங்களில் 50 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான அரசாங்க நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டு, முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 11 பேர் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் 23 குற்றப்பத்திரிகைகளின் கீழ் சட்டமா அதிபரால் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.



