நான்காவது தடவையாகவும் தோல்வியடைந்துள்ள யாழ் மாநகரசபையின் வரவு செலவுத் திட்டம்
#Jaffna
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
#Tamilnews
#budget
#municipal council
Prathees
2 years ago

யாழ்ப்பாண மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று நான்காவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
வரவு செலவு திட்டம் 06 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
யாழ்ப்பாண மாநகர சபையின் தற்போதைய மேயர் ஆர்.ஆர்னோல்ட் இரண்டாவது தடவையாக இன்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 16 வாக்குகளும் எதிராக 22 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.
யாழ்.மாநகரசபை மேயர் ஆர்.ஆர்னோல்ட் கடந்த 14ஆம் திகதி சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டமும் 08 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.
முன்னதாக மேயர் பதவியை வகித்த விஸ்வலிங்கம் மணிவண்ணன் முன்வைத்த வரவு செலவுத் திட்டமும் இரண்டு முறை தோற்கடிக்கப்பட்டது.



