ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் பிரித்தானியா இலங்கைக்கு வைத்த கோரிக்கை!

#SriLanka #UN #Human #Human Rights #Britain #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
2 years ago
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் பிரித்தானியா இலங்கைக்கு வைத்த கோரிக்கை!

அனைத்து மத மற்றும் இன குழுக்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் இலங்கையின் அர்ப்பணிப்புகளை நாங்கள் வரவேற்பதாக பிரித்தானியா, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப்பேரவையின் 42 வது மீளாய்வின்போது தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பு சீர்திருத்தத்தை மேம்படுத்துவதற்கான இலங்கையின் அண்மைய முயற்சிகள் குறிப்பாக வரவேற்கத்தக்கவை என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் பிரித்தானியாவுக்கான நிரந்தர பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் அனைத்து சமூகங்களுக்கும் நல்லிணக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல், சுயாதீன உள்நாட்டு நிறுவனங்கள், சிவில் சமூக இடத்தைப் பாதுகாத்தல் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை தாம் வலியுறுத்துவதாக பிரித்தானியா குறிப்பிட்டுள்ளது.

உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரவும் அதன் அனைத்து சமூகங்களையும் சுதந்திரமாக அனுமதிக்கவேண்டும்.

பாலின நடத்தையை குற்றமாக்குவதை முடிவுக்குக் கொண்டு வருதல் மற்றும் பாலின நோக்குநிலை மற்றும் பாலின அடையாளம் தொடர்பாக சமத்துவத்தை  உறுதிப்படுத்துதல்.

தொல்பொருள் திணைக்களம் உட்பட அரசாங்க திணைக்களங்களால் வடக்கு மற்றும் கிழக்கில் காணி அபகரிப்பு மற்றும் காணிகளை அணுகுவதற்கான தடைகள் போன்றவை தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என்றும் பிரித்தானிய பிரதிநிதி, இலங்கையிடம் பரிந்துரைகளை முன்வைத்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!