சர்வதேச நாணய நிதியத்தின் உதவி: சீனாவின் பதிலுக்காகவே காத்திருக்கின்றோம்

சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய அனைத்து ஆவணங்களும் தயார் நிலையிலுள்ளதாகவும் சீனாவின் சான்றிதழ் கிடைத்தவுடன் சர்வதேச நாணய நிதியத்தில் சமர்ப்பிக்கப்படும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சீனாவுடன் தொடர்ந்தும் கலந்துரையாடி வருவதாகவும், சீனா சாதகமாக பதிலளிக்கும் என எதிர்பார்ப்பதாக அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்திருந்தார்.
சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய அனைத்து ஆவணங்களும் தயார் நிலையிலுள்ளதாகவும் சீனாவிடம் இருந்து கிடைக்க வேண்டிய கடன் சான்றிதழ் கிடைத்தவுடன், சர்வதேச நாணய நிதியத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
அடுத்த மாத இறுதிக்குள், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் வசதிக்கான ஒப்புதல் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் மேலும் கூறினார்.
வீழ்ச்சியடைந்த நாட்டிற்கு ஆதரவளிக்க சர்வதேச நாணய நிதியத்தை தவிர உலகில் வேறு எந்த நிறுவனமும் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



