திலினி பிரியமாலிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியின் அறிவிப்பு

#SriLanka #Colombo #Court Order #Tamilnews #Lanka4 #லங்கா4
Prasu
2 years ago
திலினி பிரியமாலிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியின் அறிவிப்பு

திலினி பிரியமாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் விசாரணை  செய்வதற்கான திகதியை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இன்று நிர்ணயித்துள்ளார்.

கடந்த 2013ஆம் ஆண்டு கார் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக மூடப்பட்ட கணக்கிலிருந்து  80 இலட்சம் ரூபா பெறுமதியான காசோலையைக் கொடுத்து தங்காலை பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் மோசடி செய்ததாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இன்று செவ்வாய்க்கிழமை திலினி அழைக்கப்பட்டார்.

இந்த வழக்கை தீர்வுக்கு கொண்டுவர  இரண்டரை மாத கால அவகாசம் வழங்குமாறு குற்றம்சாட்டப்பட்ட திலினி பிரியமாலி சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்தே நீதிமன்றம் குறித்த திகதி வழங்கி விசாரணைகளை ஒத்திவைத்தது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!