இந்த மாதம் இலங்கைக்கு 1இலட்சம் சுற்றுலாப்பயணிகள் வருகை - இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை
#SriLanka
#Tourist
#world_news
#Tamilnews
#Lanka4
Prasu
2 years ago

பெப்ரவரி மாதத்தில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளது.
பெப்ரவரி 26 ஆம் திகதி வரை நாட்டிற்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 100,000 ஐத் தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதத்தில் 102,545 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
பெப்ரவரி மாதம் இந்த நாட்டிற்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் ரஷ்ய பிரஜைகள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி, இந்தியா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இருந்து அதிக சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.



