நான்கு மாவட்டங்களில் நிறுவப்படவுள்ள புற்றுநோய் வைத்தியசாலை! ஜனாதிபதியின் உத்தரவு

#SriLanka #Sri Lanka President #Ranil wickremesinghe #Hospital #Jaffna #Hambantota #Badulla #Lanka4
Mayoorikka
2 years ago
 நான்கு மாவட்டங்களில் நிறுவப்படவுள்ள புற்றுநோய் வைத்தியசாலை! ஜனாதிபதியின் உத்தரவு

யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை, பதுளை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் நான்கு புற்றுநோய் வைத்தியசாலைகளை நிறுவுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

அந்தந்த மாவட்டங்களில் மருத்துவமனைகளை அமைப்பதற்கு பொருத்தமான பகுதிகளை  தீர்மானித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியின் செயலாளர்  சமன் ஏக்கநாயக்க சுகாதார அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை குறித்த மாவட்டங்களில் விசேட நவீன சிறுவர் வைத்தியசாலையொன்றை ஸ்தாபிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளைத் தயாரிக்குமாறும்  சுகாதார அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!