அமெரிக்க திரைப்படங்களை வடகொரிய குழந்தைகள் பார்க்க தடை: கிம் ஜாங்-உன்னின் அதிரடி உத்தரவு

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களை வடகொரிய குழந்தைகள் பார்க்க தடை விதிக்க அதிபர் கிம் ஜாங்-உன் முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி குழந்தைகள் மேற்கத்திய திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் பார்த்தால் அவர்களின் பெற்றோர் கைது செய்யப்படுவார்கள் என வடகொரிய அரசு அறிவித்துள்ளது.
புதிய சட்டத்தின்படி இவ்வாறு கைது செய்யப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் 06 மாத காலத்திற்கு தொழிலாளர் முகாம்களுக்கு அனுப்பப்பட உள்ளனர். அவர்களது பிள்ளைகளும் 05 வருடங்கள் தடுத்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குழந்தைகளின் கல்வி வீட்டிலிருந்து தொடங்குகிறது என்று வடகொரிய ஆட்சி கூறுகிறது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சரியான அறிவை வழங்காவிட்டால், முதலாளித்துவ சமூகத்தில் வேடிக்கை பார்த்து சமூக விரோத கும்பலாக மாறுவார்கள் என்றும் வடகொரிய நிர்வாகம் கூறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



