சுங்கப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொருட்களின் விசாரணைகளை துரிதப்படுத்த அமைச்சரவை உபகுழுவொன்று நியமிப்பு
#SriLanka
#Airport
#AirCraft
#sri lanka tamil news
#Lanka4
Kanimoli
2 years ago

சுங்கப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொருட்கள் தொடர்பான சோதனைகள் , விசாரணைகளை துரிதப்படுத்த சுங்க கட்டளைச் சட்ட திருத்த பரிந்துரைகளை முன்வைக்க அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சுங்கத்தில் தற்போது பின்பற்றப்படும் நடைமுறைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
இது தொடர்பான விடயங்களை ஆராய்ந்து, தேவைப்பட்டால் சுங்க கட்டளைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களை இனங்கண்டு அமைச்சரவைக்கு பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கு உரிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.



