சூர்யா விரைவில் பிருதிவிராஜுடன் இணைந்து பணியாற்ற உள்ளார்

#TamilCinema #Actor
Mani
2 years ago
சூர்யா விரைவில் பிருதிவிராஜுடன் இணைந்து பணியாற்ற உள்ளார்

கேரளாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ராஜன் பிள்ளையின் வாழ்க்கை கதையில் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும், தொழிலதிபர் கதாபாத்திரத்தில் பிருத்விராஜ் நடிக்க இருப்பதாகவும் இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது.

ஏற்கனவே விமான நிறுவன அதிபர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ஒரு படத்தில் சூர்யா நடித்திருந்தார். இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் கேரளாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ராஜன் பிள்ளையின் வாழ்க்கை கதையில் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும், தொழிலதிபர் வேடத்தில் பிருதிவிராஜ் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் பிருத்விராஜ் வீட்டிற்கு சூர்யாவும் அவரது மனைவி ஜோதிகாவும் நேரில் சென்றுள்ளனர். இந்தப் படம் குறித்து பேசியதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. பிருத்விராஜ் ஏற்கனவே தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் சூர்யாவுடன் நடிக்கிறார் என்ற செய்தியால் படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!