ஆணழகன் போட்டியில் கலந்து கொண்ட இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை
#Body
#Heart Attack
Mani
2 years ago

கடலூர் அருகே ஆணழகன் போட்டியில் கலந்துகொண்ட இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வடலூர் - விருத்தாசலம் சாலையில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது.
75 கிலோ உடல் எடை பிரிவில் மேடை ஏற தயாராக இருந்த சேலம் பெரிய கொல்லப்பட்டியைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவர், வாம் அப் செய்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.



