டம்மி துப்பாக்கியை காட்டி திருநங்கைகளுக்கு மிரட்டல் விடுத்த கேரள யூடியூபர்கள் கைது
#GunShoot
#Tamilnews
#Breakingnews
#ImportantNews
Mani
2 years ago

கோவை கவுண்டம்பாளையத்தில் டம்மி துப்பாக்கியை காட்டி திருநங்கைகளுக்கு மிரட்டல் விடுத்த 3 கேரள யூடியூபர்களை போலீசார் கைது செய்தனர். குரும்படம் எடுப்பதற்காக நேற்றிரவு கோவை வழியாக ஊட்டிக்கு சென்ற கேரளாவைச் சேர்ந்த 3 இளைஞர்கள், சாலையோரத்தில் நின்றிருந்த திருநங்கைகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் ஏற்பட்ட தகராறில், திலீப் என்பவன் துப்பாக்கியை எடுத்து திருநங்கைகளை மிரட்டியதாக கூறப்படுகிறது. அவ்வழியாக வந்தவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்த நிலையில், இளைஞர்கள் பிடித்து போலீசார் விசாரித்ததில், அவர்கள் சினிமா சூட்டிங்கிற்கு பயன்படுத்தப்படும் டம்மி துப்பாக்கியை காட்டி மிரட்டியது தெரியவந்தது.
மூவரையும் கைது செய்து அவர்களது காரை பறிமுதல் செய்த துடியலூர் போலீசார், ஆயுத தடை சட்டம், கொலை மிரட்டல் உட்பட 4 பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



