வடகிழக்கு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது

#India #State #Election
Mani
3 years ago
வடகிழக்கு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் நாகாலாந்து சட்டசபைகளின் பதவிக்காலம் முடிவடைகிறது.இந்த மாநிலங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது: மேகாலயாவில் 60 தொகுதிகளும், நாகாலாந்தில் 60 தொகுதிகளும்.இரு மாநிலங்களிலும் பாஜக, காங்கிரஸ் போன்ற முக்கிய கட்சிகளும், மாநிலத்தைச் சேர்ந்த சிறிய கட்சிகளும் கடந்த சில வாரங்களாக மாநிலம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த பிரசாரம் நேற்று முன்தினம் முடிவடைந்தது.

மேகாலயா மற்றும் நாகாலாந்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதால் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். மூத்த குடிமக்களும் வாக்களிப்பதன் மூலம் தங்களின் ஜனநாயகக் கடமையைச் செய்கிறார்கள். மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.

வாக்குப்பதிவை அமைதியாக நடத்துவதற்காக இரு மாநிலங்களிலும் ஏராளமான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேகாலயா மற்றும் நாகாலாந்தில் இன்று நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் அடுத்த மாதம் 2ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4