ரயில்வே திணைக்களத்தில் நிலவிவரும் பிரச்சினைகளைத் தீர்க்காவிட்டால் பணிப்புறக்கணிப்பில் இறங்குவோம் -தொழிற்சங்கம்
ரயில்வே திணைக்களத்தில் நிலவிவரும் பிரச்சினைகளைத் தீர்க்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்கத் தவறினால், எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம் என ரயில்வே தொழிற்சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தலைமன்னார் ரயில் பாதையில் கடுமையான சிக்னல் குறைபாடுகள் இருந்தபோதிலும் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இது பாதுகாப்பற்ற இயக்க நிலைமைகளை உருவாக்குவதாகவும் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் அந்தப் பாதையில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்ட போதிலும், சேதமடைந்த சிக்னல் அமைப்பைச் சரிசெய்ய இதுவரை முறையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.
மஹோ-அனுராதபுரம் பிரிவில் சிக்னல் தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பதாகவும், தற்காலிக சிக்னல் ஏற்பாடுகளின் கீழ் ரயில் இயக்கங்கள் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்படி பில்லியன் கணக்கான ரூபாய் பொது நிதியில் புனரமைக்கப்பட்ட ரயில் பாதைகள், முறையான பராமரிப்பு மற்றும் செயல்பாட்டு மேம்பாடுகள் இல்லாததால் தற்போது மோசமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே