தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய அவசியம் இல்லை: மஹிந்த

#Mahinda Rajapaksa #Election #Parliament #SriLanka #sri lanka tamil news #Lanka4
Prathees
2 years ago
தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய அவசியம் இல்லை: மஹிந்த

தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய அவசியம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று முடிவடைந்து வெளியேறும் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதற்கிடையில், தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றத்தின் நடுவேயில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். 

இதனால், நாடாளுமன்ற நடவடிக்கைகள் 45 நிமிடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதுடன், சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதால், நாடாளுமன்றத்தை நாளை காலை 9:30 மணி வரை ஒத்திவைக்க சபாநாயகர் தீர்மானித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!