நியூ முராப்பா! ஹாலோகிராபிக் தொழில்நுட்பத்தில் ஆச்சரிய நகரத்தை அமைக்கிறது சவுதி அரேபியா!

#Dubai #UAE
Mani
2 years ago
நியூ முராப்பா! ஹாலோகிராபிக் தொழில்நுட்பத்தில் ஆச்சரிய நகரத்தை அமைக்கிறது சவுதி அரேபியா!

சவுதி அரேபிய தலைநகரம் ரியாத்தில், சினிமாவில் வருவது போன்ற புதிய நகரத்தை அந்நாட்டு அரசு கட்டமைக்க உள்ளது. புதிய முராப்பா என்ற பெயரில் கட்டப்பட உள்ள இந்த நகரம் சுமார் 19 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

400 மீட்டர் அகலம், 400 மீட்டர் உயரம், 400 மீட்டர் நீளத்தில் கட்டப்பட உள்ள முராப்பா அமெரிக்காவில் உள்ள எம்பையர் ஸ்டேட் கட்டடத்தைபோல் 20 மடங்கு பெரியதாக அமைய உள்ளது.

2030ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ள முராப்பா நகரம் ஹாலோகிராபிக் தொழில் நுட்பத்தில் கட்டமைக்கப்பட உள்ளது. இந்த நகரத்தினுள் பறக்கும் டிராகன்கள், மிதக்கும் பாறைகள் போன்றவை புதிய தொழில் நுட்பத்தில் அமைக்கப்பட உள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!