வவுனியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட இளம் பெண் உட்பட இருவர் கைது

வவுனியா தேக்கவத்தை பிரதேசத்தில் இயங்கி வரும் தனியார் விடுதி ஒன்றில் சட்டவிரோதமான முறையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட இளம் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் வவுனியா மாவட்டத்தில் எச்.ஐ.வி வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் வேகமாக பதிவாகியிருக்கும் தருணத்தில் முன்னதாக, தேக்கவத்தை பகுதியில் உள்ள இந்த தனியார் விடுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட மூன்று பெண்களுக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம், அதன் அதிகாரிகள் குழுவொன்று விடுதியைச் சுற்றிவளைத்து, யுவதி ஒருவரையும் மற்றுமொரு சந்தேக நபரையும் கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட யுவதி நொச்சியாகம பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடையவர் என்பதுடன், இவர் இதற்கு முன்னர் மன்னார் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் நாட்டின்பல பகுதிகளில் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
எனினும், தேக்கவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள பல தனியார் விடுதிகளில் சட்டவிரோதமாக விபச்சாரத்தில் ஈடுபடுவதால், பிரதேசவாசிகளும் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.



