பதிவு செய்யப்படாத மருந்தின் பொறுப்பை சுகாதார அமைச்சரோ அமைச்சோ பொறுப்பேற்க முடியாது! சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர்

மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் மீது செல்வாக்கு செலுத்தும் சில நிபுணர்கள் இந்திய மருந்துகளுக்கு எதிர்ப்பை உருவாக்குவதும், சுகாதார அமைச்சர் தேவையற்ற இந்திய விசுவாசத்தை காட்டுவதும்தான் நாட்டில் மருந்து தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம் என சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார். .
மருந்துகளின் நிலை தொடர்பான பொறுப்பை சுகாதார அமைச்சரோ அல்லது சுகாதார அமைச்சுக்கோ ஏற்க முடியாது எனவும் அது முழுக்க முழுக்க மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் பொறுப்பாகும் எனவும் குமுதேஷ் தெரிவித்தார்.
பதிவு செய்யப்படாத மருந்தின் பொறுப்பை சுகாதார அமைச்சர், அமைச்சு அல்லது எந்தவொரு விசேட வைத்தியர் அல்லது வேறு எவரும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், இரு தரப்பினரும் தனிப்பட்ட நலன்களுக்காக சுகாதார சேவையை சிக்கலில் ஆழ்த்துவதாகவும் ரவி குமுதேஷ் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளை பயன்படுத்துவதால் நோயாளர்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு சுகாதார அமைச்சு பொறுப்பேற்கும் எனவு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கண்டியில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



