திடீர் பயணமாக உக்ரைன் சென்ற அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

#world_news #Biden #Ukraine #SriLanka #Sri Lankan Army #Lanka4 #sri lanka tamil news #srilanka freedom party
Prabha Praneetha
2 years ago
 திடீர் பயணமாக உக்ரைன் சென்ற அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் திடீர் பயணமாக உக்ரைன் சென்றுள்ளார். உக்ரைன் தலைகர் கீவ் நகரில் அந்த நாட்டின் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியுடன் ஜோ பைடன் நடந்து செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

உக்ரைன் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா அந்த நாட்டின் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி 24 ஆம் திகதி போர் தொடுத்தது.

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தொடங்கி ஓராண்டு கிட்டதட்ட நெருங்கிவிட்டது. இருந்தாலும் ரஷ்யா நினைத்தது போல உக்ரைனை அவ்வளவு எளிதில் ரஷ்யாவால் கைப்பற்ற முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் உக்ரைன் படைகளும் ரஷ்யாவிற்கு கடுமையான பதிலடி கொடுத்தது.

உக்ரைனுக்கு அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகள், நிதி உதவிகளை தொடர்ந்து செய்து வருவது மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்ய படைகள் அவ்வப்போது குண்டு மழை பொழிந்தாலும் உக்ரைன் படைகளும் தக்க பதிலடியை கொடுத்து ரஷ்யாவிற்கு தக்க பதிலடியை கொடுத்து வருகிறது.

உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் சர்வதெச அளவில் பல்வேறு பொருளாதார நெருக்கடிக்கும் வித்திட்டுள்ளது.

ரஷ்யா - உக்ரைன் போர் விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே உக்ரைன் பக்கம் நிற்கும் அமெரிக்கா, உக்ரைனுக்கு பல்வேறு உதவிகளை செய்துவருகிறது. அதேபோல், ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார தடைகளையும் விதித்து வருகிறது.

இப்படி பல்வேறு வழிகளில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா நின்று வரும் நிலையில், இன்று அந்த நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் திடீர் பயணமாக உக்ரைன் சென்றுள்ளார். உக்ரைன் தலைகர் கீவ் நகரில் அந்த நாட்டின் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியுடன் ஜோ பைடன் நடந்து செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!