இலங்கைக்கு சீனாவின் உத்தரவாதங்கள் இன்றி பங்குச்சந்தையில் உயர்வுப் போக்கை அவதானிக்கமுடிந்தது.

இலங்கைக்கு சீனாவின் உத்தரவாதங்கள் இன்றி 2.9 பில்லியன் டொலர்களை சர்வதேச நாணய நிதியம் வழங்கலாம் என்ற நம்பிக்கையில் இலங்கையின் பங்குச்சந்தையில் இன்று நண்பகல் வர்த்தகத்தில் உயர்வுப் போக்கை அவதானிக்கமுடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் கடன் மறுசீரமைப்பு ஆதரவின் உத்தரவாதம் இல்லாமல் கூட, இந்த கடனை சர்வதேச நாணய நிதியம் வழங்கமுடியும் என்று ப்;ளூம்பேர்க் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து இன்று கொழும்பு பங்குச்சந்தையின் அனைத்து பங்கு விலைக் குறியீடு 2.58 சதவீதம் அல்லது 228.73 புள்ளிகள் உயர்ந்து 9,077.09 ஆக நிலவியது.
அதே நேரத்தில் மிகவும் திரவக் குறியீடு எஸ் என்ட் பி எஸ்எல்20, 2.56 சதவீதம் 69.44 புள்ளிகள் உயர்ந்து இன்று முற்பகல் 11.30 அளவில் 2,782.18 ஆக இருந்தது.
வர்த்தகத்தின் முதல் ஒரு மணி நேரத்தில் பங்குச்சந்தை 951 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது.



