வாக்குறுதி அளித்தபடி தேர்தலை நடாத்த முடியாது: தேர்தல் ஆணையம்
#SriLanka
#Election
#Election Commission
#Lanka4
Mayoorikka
2 years ago

வாக்குறுதி அளித்தபடி உள்ளூராட்சி தேர்தலை நடத்தும் நடவடிக்கைகள் தடைபட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
போதிய நிதி மற்றும் இதர வசதிகள் இல்லாததால், தேர்தல் தடைபட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, உள்ளூராட்சி தேர்தலை திட்டமிட்டபடி நடத்த நடவடிக்கை எடுப்பதாக உயர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மூலம் இந்த உண்மைகள் வெளியாகியுள்ளன.



