சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் இருவரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 9 பேர் வைத்தியசாலையில் அனுமதி
#SriLanka
#students
#Attack
#Hospital
#sri lanka tamil news
#Lanka4
Prasu
2 years ago

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் இருவரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் முதலாம் வருட மாணவர்கள் 9 பேர் காயமடைந்து பலாங்கொடை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
3 ஆம் ஆண்டு மற்றும் 4 ஆம் ஆண்டு முகாமைத்துவ பீட மாணவ குழுக்களால் இந்தத் தாக்குதல் புதன்கிழமை (15) இரவு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
தாக்குதலுக்கு உள்ளான மாணவர்கள் குழு சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் விடுதி ஒன்றில் தங்கியிருந்ததாகவும் சிரேஷ்ட மாணவர்கள் அந்த விடுதிக்குள் நுழைந்தே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை , சமனலவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



