சர்ச்சைக்குரிய முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திரவிற்கு உயர் பதவி!
#SriLanka
#Sri Lanka President
#Tamilnews
#Tamil
#sri lanka tamil news
#Lanka4
Mayoorikka
2 years ago

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் புதிய முகாமைத்துவப் பணிப்பாளராக முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணவர்தன நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ரவீந்திர விஜேகுணவர்தன இன்று (14) பதவியேற்றுள்ளார்.
2016 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் போது ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் நடத்திய போராட்டத்தின் போது ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ரவீந்திர விஜேகுணவர்தன குறித்து சர்ச்சை எழுந்தது.
முன்னாள் முகாமைத்துவப் பணிப்பாளர் சுசந்த சில்வாவின் சேவை கடிதம் மூலம் இடைநிறுத்தப்பட்டு புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபன சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.



