வாக்குரிமையை பறிக்கும் முயற்சிக்கு எதிராக போராடுவோம்! ரஞ்சித் மத்துமபண்டார
#SriLanka
#Sri Lanka President
#sri lanka tamil news
#Election
#Tamilnews
#Lanka4
Mayoorikka
2 years ago

நாட்டு மக்களின் வாக்குரிமையை பறிக்கும் முயற்சிக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளுடனும் ஐக்கிய மக்கள் சக்தி நிபந்தனையற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.
ஜனநாயக விரோதச் செயற்பாடுகளில் ஈடுபடாமல் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட வேண்டுமெனவும் செயலாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
“பணத்தை வழங்க முடியாவிட்டால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்குகள் அச்சிடுவது இடைநிறுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தேர்தலை நடத்த பணம் கொடுக்கவில்லை என்றால், அது மக்களின் இறையாண்மையை அபகரிப்பதாகும்.



