மதுபோதையில் வீட்டுக்கு சென்ற சிறுவன்: தாயின் செயலால் உயிரிழப்பு! யாழில் சம்பவம்

#SriLanka #Jaffna #Crime #Death #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
2 years ago
மதுபோதையில் வீட்டுக்கு சென்ற சிறுவன்: தாயின் செயலால் உயிரிழப்பு! யாழில் சம்பவம்

மதுபோதையில் வீட்டுக்கு சென்ற சிறுவனை  தாய் கண்டித்ததால் சிறுவன்  உயிரை மாய்த்த சம்பவம் ஒன்று யாழ் சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

 14 வயதுச் சிறுவன் ஒருவரே இவ்வாறு  உயிரை மாய்த்துள்ளார்.

குறித்த சிறுவன் ஞாயிற்றுக்கிழமை (12) மாலை மதுபோதையில் வீட்டுக்கு சென்றுள்ளார். அவர் மது போதையில் சென்றதை அவரின் தாயார் கண்டித்துள்ளார். இதனால் தவறான முடிவு எடுத்து உயிரை மாய்க்க முற்பட்ட நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில்,நேற்று காலை அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

இறப்பு தொடர்பில் யாழ்ப்பாணம் போதன வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!