பிரிந்துபோன காதலர்களின் நினைவாக கரப்பான் பூச்சிக்கு பெயர் வைக்கும் நிகழ்வு!

காதலர் தினத்தை முன்னிட்டு, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சான் அன்டோனியோ உயிரியல் பூங்காவில், காயப்பட்டு விட்டுச் சென்ற காதலன் அல்லது காதலியின் நினைவாக கரப்பான் பூச்சிக்கு பெயர் வைக்கும் நிகழ்ச்சி இன்று (14) அமுல்படுத்தப்படுகின்றது.
இதயம் உடைந்த, பிரிந்து போன காதலன் அல்லது காதலியின் நினைவாக, கரப்பான் பூச்சியை உண்ணும் மிருகக்காட்சிசாலையில் உள்ள மற்றொரு விலங்குக்கும் உணவளிக்கப்படுகிறது. .
மனம் உடைந்து கைவிடப்பட்ட காதலுக்கு இப்படி பெயர் வைப்பதற்கு கட்டணமாக 5 அல்லது 25 அமெரிக்க டாலர்கள் வரை வசூலிக்கப்படுகிறது.. இந்த தொகை உயிரியல் பூங்கா பராமரிப்புக்கு பயன்படுத்தப்படும்.
கரப்பான் பூச்சிகளுக்கு பெயர் சூட்டப்பட்டு டிஜிட்டல் காதலர் அட்டை வழங்கவும் உயிரியல் பூங்கா அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். இதற்கிடையில், பிரிந்த காதலன் அல்லது காதலியின் தொலைபேசி எண் இருந்தால் அவர்களுக்கு டிஜிட்டல் செய்தியும் அனுப்பப்படுகிறது.



