அரசாங்கத்தின் நிதி செலவைக் கட்டுப்படுத்த ரயிலில் பயணித்த அமைச்சர்!

#SriLanka #sports #Minister #Train #sri lanka tamil news #Tamilnews #Lanka4
Mayoorikka
2 years ago
 அரசாங்கத்தின் நிதி செலவைக் கட்டுப்படுத்த ரயிலில் பயணித்த அமைச்சர்!

அரசாங்கத்தின் நிதி செலவைக் கட்டுப்படுத்தும் ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு அமையவும் விளையாட்டுதுறை அமைச்சின் செலவுகளைக் குறைக்கும் நோக்குடன் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்கவும் தேசிய விளையாட்டு சபையின் தலைவர் அர்ஜுண ரணதுங்கவும் கொழும்பிலிருந்து கண்டிக்கு ரயிலில் விஜயம் செய்துள்ளனர்.

கண்டி- பள்ளேகல மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மத்திய மாகாண விளையாட்டு அதிகாரிகள் மற்றும் முகாமைத்துவ அதிகாரிகளை தெளிவுப்படுத்தும் நிகழ்வுக்காக அவர்கள் அங்கு சென்றனர். 

அரசாங்கத்தின் நிதி செலவைக் கட்டுப்படுத்தும் ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு அமையவும் விளையாட்டுதுறை அமைச்சின் செலவுகளைக் குறைக்கும் நோக்குடன் குறித்த இருவரும் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!