இன்றைய வேத வசனம் 03.02.2023: பாவங்களுக்கும் உடன்படாதே; உன்னைச் சுத்தவானாகக் காத்துக்கொள்.
எனக்கு 25 வயதாக இருக்கும் போது திடீரென்று ஒருநாள் ஒரு இளம் தம்பதியினர் என் வீட்டுப் பக்கத்தில் குடியேறினார்கள்.
அவர்கள் இருவரோடும் நான் அன்பாக பேசுவேன். நாளடைவில் அந்த அக்காவோடு! அதிகம் பேச ஆரம்பித்தேன்.
மொபைலில் Chatting, Whatsup chatting என்று இரவு நேரங்களில் எங்கள் அன்பு பரிமாறப்பட்டது. நான் அலுவலகத்தில் இருக்கும் போதும் எனக்கு போன் செய்து தொந்தரவு செய்வார்கள். அதினால் சில சண்டைகள் ஏற்பட்டது.
சில மாதங்களுக்கு முன்னால், எனக்கு திருமணம் நிச்சயமானது. அதினால் நான் அந்த அக்காவிடம் பேசுவதை நிறுத்த யோசித்தேன். ஆனால் அவர்கள் தொடர்ந்து என்னை தெந்தரவு செய்தார்கள்.
எனக்கு திருமணமாகி தற்போது இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. இன்னமும் தொடர்ந்து SmS அனுப்பிக் கொண்டே இருக்கிறார்கள். என் மனைவிக்கு தெரிந்தால் என்ன ஆகும் என்று பயமாக இருக்கிறது.
விளையாட்டாக ஆரம்பித்தது இன்று விபரீதமாகிக் கொண்டிருப்பதை உணருகிறேன். என் மீதும் தவறு உள்ளது.
நான் எல்லை மீறியது என் தவறு என் மனைவிக்கு நான் துரோகம் செய்துவிட்டேனோ என்ற குற்றமனசாட்சி என்னை வாட்டுகிறது. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை! நான் என்ன செய்ய வேண்டும் பதில் சொல்லுங்களேன் - (குமார், தென்காசி)
அன்பு சகோதரர் குமார்! உங்களின் - உள்ளான பயம், மன வேதனை குற்ற மனசாட்சி போன்ற பல காரியங்கள் உங்கள் இருதயத்தை கசக்கி பிழிவதை உணர முடிகிறது.
குமார் தவறு செய்கிறோம் அதிலிருந்து வெளியே வரவேண்டும் என்ற உணர்வு மிக சிறப்பான ஒன்று.
குமார் இன்றைக்கு பல வாலிபர்கள் இந்த சிக்கலான அன்பில் மாட்டிக் கொள்வது சகஜமாகிவிட்டது. நாம் அக்கா என்ற அன்போடும், பாசத்தோடும் நான் பழகுகிறோம். ஆனால் எந்த உறவுமே தன் எல்லைகளை மீறும்போதும், வரம்புகளை தாண்டும்போதும் ஆபத்தில் தான் கொண்டு போய்விடும்.
அதினால் தான் நம் முன்னோர்கள் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று சொன்னார்கள்.
எனவே உங்களை கசந்துக் கொள்வதை சற்றுக் குறைத்துக் கொள்ளுங்கள். இந்த பிரச்சனையில் இருந்து வெளிவர விரும்பினால், நீங்கள் சில முயற்சிகளை கையாளும் போது நீங்கள் இந்த தவறான உறவில் இருந்து வெளியே வரலாம்.
அவர்களை குறித்ததான அனைத்து Chat, pictures, SMS முற்றிலும் Delete செய்து விடுங்கள்.
போன் நம்பரை Block செய்வது நல்லது.
அவர்கள் தொடர்ந்து உங்களை தொடர்பு கொண்டால் கண்டிப்பாக மொபைல் நம்பரை மாற்ற வேண்டும்
குமார் உங்களின் வீட்டு அருகில் அந்த சகோதரியை பார்க்க நேரிடும் சூழலில் இருந்தால் உங்கள் வீட்டை மாற்றுவது சிறந்த செயல்.
நான் ஏன் பயப்படவேண்டும், நான் ஏன் ஓட வேண்டும் என்று யோசிக்க வேண்டாம். உங்களுக்கு உங்களின் திருமண உறவு பாதிக்கப்படக் கூடாதென்றால் இந்த முயற்சியையும், இந்த மாற்றங்களையும் நீங்கள் செய்து தான் ஆக வேண்டும்.
காரணம் ஆரம்பத்தில் அந்த சகோதரியின் மீது அன்பு காட்டி பேசியது, நேரம் செலவிட்டது உங்களின் தவறு என்பதை உங்களால் மறுக்க முடியாது.
நீங்கள் இந்த தவறான உறவிலிருந்து வெளியே வர விரும்புகிற காரணத்தால், நீங்கள்தான் அத்தனை முயற்சிகளையும் மாற்றங்களையும் செய்ய வேண்டும்.
தயவு செய்து காலம் தாழ்த்தாமல் இதை செய்யும்போது, உங்களின் அழகிய திருமணம் ஸ்தம்பிக்காமல் சிறப்பாக செயல்பட வாய்ப்பு உள்ளது.
ஒருவேளை எப்படி அந்த நபரை புறக்கணிப்பது இத்தனை மாதம் பழகி விட்டோமே என்று யோசித்தால் உங்களின் திருமண உறவில் விரிசலும், விபரீதமும் ஏற்பட வாய்ப்பு உண்டு.
இதை வாசிக்கும் என் அன்பு சகோதர சகோதரிகளே அநேக நேரம் உங்கள் வயதில் இருக்கும் எதிர்பாலரோடு பேசினால் காதலில் விழுந்து மாட்டிக் கொள்வோம் என்று சொல்லி சற்று விழிப்பாக இருக்கும் அநேக வாலிபர்கள், தங்களுடன் வயதில் மூத்த அண்ணன் மார்களோடு, அக்காமார்களோடு பழகினால் தனக்கு எந்த ஆபத்தும் தேடித்தராது என்று யோசித்து பழகும்போது குமாரை போன்ற பிரச்சனையில் மாட்டி வேதனைபடும் வாலிபர்கள் இன்று அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே எந்த பாலினரிடமோ, எந்த வயது குறைந்தவரோ, வயது மூத்தவரோ உங்களின் உறவு அளவிற்கு மீறி செல்லக் கூடாது, அது ஆபத்து!
நான் அண்ணனாக தான் நினைத்தேன், ஆனால் இப்பொழுது தவறு நேர்ந்துவிட்டது என்று கண்ணை கசக்கும் தங்கைமார்கள் அதிகம்.
Friendshipக்கும் காதலுக்குமிடையே ஒரு மெல்லிய நூலிழை தான் இடைவெளி இருக்கும். சற்று அசந்தால் காதல் என்னும் அசிங்கமான குழியில் விழ வாய்ப்பு உண்டு.
அதேபோல் தான் என்னைவிட மூத்தவர்கள் எனக்கு நல்ல அக்கா, அண்ணன் மேலும் அவர்கள் திருமணமானவர்கள் எனவே பிரச்சனை இல்லை என்று பழக முற்படும் பலர் இப்படிப்பட்ட சிக்கலான உறவுகளில் மாட்டிக்கொண்டு , சொந்த திருமண வாழ்க்கையை வாழ முடியாமல் தத்தளிப்பது தமிழ்நாட்டில் சகஜமாகிக் கொண்டிருக்கிறது.
எனவே வாலிபர்களே! சற்று இடைவெளி விட்டு பாதுகாப்பாக பழக முற்படுங்கள்! எந்த உறவுகளாக இருந்தாலும் உறவாக இருக்க வேண்டும்!
எனவே எந்த உறவாக இருந்தாலும் அவசியமில்லாத பேச்சுக்களை தவிர்க்கவும். கூடுமானமட்டும் உங்கள் செல்போன் நம்பரை மற்றவரிடம் பரிமாறாமல் இருப்பது நல்லது.
மேலும் இத்தனை மணிக்கு மேல் யாரும் உங்களை தேவையில்லாமல் SMS மூலமாக தொந்தரவு செய்ய அனுமதிக்க வேண்டாம்.
குறிப்பாக நீங்கள் எந்த SMSக்கு பதில் தரவேண்டிய அவசியமும் இல்லை. ஒருவேளை இரவு நேரங்களில் குமார் அந்த சகோதரியோடு chatting செய்வதை தவிர்த்தி ருந்தால், அவர்களிடையே தேவையில்லாத உரையாடல் களை தவிர்த்திருக்கலாம்.
தீமோத்தேயு 5:22
பாவங்களுக்கும் உடன்படாதே; உன்னைச் சுத்தவானாகக் காத்துக்கொள்.
ஆமென்!! அல்லேலூயா!!!