பெஷாவரில் உள்ள ஒரு மசூதியில் இன்று குண்டு வெடிப்பு - 19 பேர் உயிரிழப்பு
Prabha Praneetha
2 years ago

பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரின் மசூதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் ,90 பேர் காயமடைந்ததோடு ,சில பேர் கவலைக்கிடமாகவும் உள்ளனர் என்று உள்ளூர் காவல்துறை அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.
தொழுகைக்காக ஏராளமான மக்கள் கூடியிருந்த மசூதியிலேயே இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின்போது, கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்துள்ளது.
இந்த கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்குண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது



