இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள பங் கி மூன்.. பல ஒப்பந்தங்களில் கைச்சாத்து
Prathees
2 years ago

ஐக்கிய நாடுகளின் முன்னாள் செயலாளர் நாயகம் பங் கி மூன் எதிர்வரும் 6ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
தனது விஜயத்தின் போது, இலங்கையின் நிலையான அபிவிருத்தி மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான பல ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவார் என அவர் நம்புகின்றார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் அவர் இலங்கை வருகிறார்.
திரு. பன் கி-மூன் தற்போது தென் கொரியாவின் அரசாங்க நிறுவனமான குளோபல் கிரீன் க்ரோத் இன்ஸ்டிட்யூட்டின் தலைவராக உள்ளார்.



