பிரான்ஸ் மாணவர் போராட்டம் - இதுவரை 2000 பேர் கைது

#ARREST #FRANCE #Protest #LANKA4 #students #L4
Prasu
1 hour ago
பிரான்ஸ் மாணவர் போராட்டம் - இதுவரை 2000  பேர் கைது

பிரான்சில் பாடசாலைகளின் நிலைமையை மேம்படுத்தக் கோரி மாணவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ள நிலையில், போராட்டங்கள் ஆரம்பித்ததிலிருந்து சுமார் 2,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாரிஸ் பிராந்தியத்தில் கடந்த செப்டெம்பர் மாத இறுதியில் ஆரம்பமான இந்தப் போராட்டங்கள் தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியுள்ளன.

ஆசிரியர் பற்றாக்குறை, வகுப்பறைகளில் அதிகளவான மாணவர்கள், பழுதடைந்த பாடசாலைக் கட்டிடங்கள், போதிய கற்றல் உபகரணங்கள் இல்லாமை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டங்கள் காரணமாக வெள்ளிக்கிழமை (2) பிரான்ஸ் முழுவதும் 400க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. 

சில பகுதிகளில் போராட்டங்கள் தீவைப்பு, சொத்துச் சேதம் மற்றும் பொலிஸாருடனான மோதல்களாக மாறியுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!