தற்போதைய முட்டை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் - இல்லையெனில் கோழிகளின், சேவல்களின்; சத்தம் மக்களுக்கு கேட்கும்!!

#SriLanka #Sri Lanka President #Lanka4
Prabha Praneetha
2 years ago
தற்போதைய முட்டை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் - இல்லையெனில்  கோழிகளின், சேவல்களின்; சத்தம் மக்களுக்கு கேட்கும்!!

சுதந்திரத்தின் 75வது ஆண்டு நிறைவடையும் பெப்ரவரி 4-ம் திகதிக்குள் தற்போதைய முட்டை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

இல்லையெனில்  கோழிகளின், சேவல்களின்; சத்தம் மக்களுக்கு கேட்கும் என்று அகில இலங்கை சிற்றுண்டிய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அகில இலங்கை சிற்றுண்டியக சங்கங்களின் தலைவர் அசேல சம்பத் இன்று ஊடகங்களிடம் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கத்தால் பிரச்சினையை தீர்க்க முடியாவிட்டால், கோழி மற்றும் முட்டைகளுடன் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு அணிவகுத்துச் செல்லப்போவதாக அவர் எச்சரித்துள்ளார்.

நாட்டின் முட்டைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக பொது நிறுவனங்களுக்கான குழு (கோப்) அதன் வரலாற்றில் முதல் முறையாக நுகர்வோர் விவகார ஆணையத்தை (சிஏஏ) சந்திக்க வேண்டியிருந்தது என்பதைக் கேட்பது  தலைகுனியவேண்டிய விடயம் என்றும் அவர் கூறினார்.

முட்டை பிரச்சினையைக் கூட தீர்க்காமல் நாட்டை கட்டியெழுப்புவதில் இந்த அரசியல்வாதிகள் எவ்வாறு ஈடுபடுகிறார்கள் என்பது கேள்வியாக உள்ளது என சம்பத் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!