வடகொரிய நாட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பால் தலைநகர் பியோங்யாங்கில் ஊரடங்கு அமுல்
#China
#Corona Virus
#Covid 19
#Death
#Curfew
#world_news
#Tamilnews
#Lanka4
Prasu
2 years ago

சீன நாட்டில் கடந்த 2019 ஆம் வருடத்தில் பரவத் தொடங்கிய கொரோனா உலக நாடுகளை தலைகீழாக புரட்டி போட்டது. கொரோனா தொற்றால் பல உயிரிழப்புகளும் பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டது.
சமீப மாதங்களாக கொரோனா பரவல் குறைந்திருந்தது. தற்போது மீண்டும் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியிருக்கிறது.
எனவே, மக்களிடையே அச்சம் ஏற்பட்டிருக்கிறது. அந்த வகையில், வடகொரிய நாட்டில் கொரோனா தொற்று தற்போது அதிகமாக பரவிக் கொண்டிருக்கிறது.
எனவே, நாட்டின் தலைநகர் பியோங்யாங்கில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. 5 நாட்களுக்கு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், மக்கள் குடியிருப்புகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.



