அரசாங்கம் விநியோகம் செய்யும் உரங்களால் நெற்பயிர்களுக்கு நோய்கள்: புதிய சந்தேகம்

#SriLanka #Food
Mayoorikka
2 years ago
அரசாங்கம்  விநியோகம் செய்யும் உரங்களால் நெற்பயிர்களுக்கு நோய்கள்:  புதிய சந்தேகம்

நாடளாவிய ரீதியில் சில பிரதேசங்களில் நெற்பயிர்ச் செய்கையை பாதித்துள்ள நூற்புழு நோய்க்கு இயற்கை விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் தரமற்ற சேதன உரங்களைப் பயன்படுத்துவதே காரணமா என்பது குறித்து விவசாயத் திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பில் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்ததாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

2021 பருவத்தில் ரசாயன உரங்களை தடை செய்த பிறகு, பல்வேறு நிறுவனங்களால் விவசாயிகளுக்கு இயற்கை உரங்கள் விநியோகிக்கப்பட்டன. அந்த நிறுவனத்தால் முறையான தரத்தில் கரிம உரங்கள் தயாரிக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

சோதித்த உர மாதிரிகளில் நூற்புழுக்கள் அதிகமாக இருப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த நோயைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விவசாயிகளுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டத்தை விவசாய திணைக்களம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!