பெருவில் அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 47ஆக உயர்வு
#Protest
#Death
Prasu
2 years ago
பெருநாட்டின் முன்னாள் அதிபரான பெட்ரோ காஸ்டிலோ ஊழல் வழக்கில் சிக்கி, கடந்த மாதத்தில் பதவியிலிருந்து நீக்கப்பட்டதோடு கைதானார்.
அதன் பிறகு, மூத்த பெண் அரசியல்வாதியாக இருந்த டினா பொலுவார்டே, அதிபராக பொறுப்பேற்றார். எனினும் பெட்ரோவின் ஆதரவாளர்கள் அவரை விடுதலை செய்யுமாறும் தற்போதைய அதிபர் பதவி விலக வேண்டும் என்றும் நாடு முழுக்க தொடர்ந்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகிறார்கள்.
தற்போது இந்த போராட்டம் வன்முறையாக மாறியிருக்கிறது. இதில் 47 நபர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். கலவரத்தை கட்டுப்படுத்துவதற்காக மூன்று நாட்கள் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.



