கொரோனா தொற்றால் ஏற்படக்கூடிய நீண்ட கால விளைவுகள் பற்றி இஸ்ரேலில் ஆய்வாளர்களினால் நடத்தப்பட்ட ஆய்வு
கொரோனா தொற்றால் ஏற்படக்கூடிய நீண்ட கால விளைவுகள் பற்றி முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலில் ஆய்வாளர்களினால் இது தொடர்பில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தாலும் அதன் பின்னர் தொடரும் சில அறிகுறிகளை ஆராய்ச்சியாளர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
நோய்ப்பரவல் தொடங்கியதிலிருந்து கடந்த ஆண்டு அக்டோபர் வரை, மிதமாகப் பாதிக்கப்பட்ட சுமார் 2 மில்லியன் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வை அடுத்து இஸ்ரேல் அதன் கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளது.
அத்தகையோருக்கு, ஓராண்டுக்குள் பெரும்பாலான அறிகுறிகள் போய்விடும் என்று கூறப்படுகிறது. ஆனால் சிலருக்கோ ஒரு வருடத்துக்குப் பிறகும் அறிகுறிகள் தொடர்வதாக ஆய்வு காட்டுகிறது.
வாசனை அல்லது சுவை அறியும் உணர்வு இழப்பு, சுவாசப் பிரச்சினைகள், உடல் பலவீனம், தெளிவில்லாமல் இருப்பது ஆகியவை வழக்கமாகத் தொடரும் அறிகுறிகள் என்று குறிப்பிடப்பட்டது.
தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்குச் சுவாசப் பிரச்சினைகள் வரும் சாத்தியம் குறைவு என்று ஆய்வு காட்டுகிறது.
இருப்பினும் ஆய்வின் முடிவுகள், அண்மையில் பரவிவரும் புதிய வகை ஓமக்ரான் கிருமிகளுக்குப் பொருந்துமா என்பது தெளிவாகத் தெரியவில்லை



