அமெரிக்காவில் இருந்து தபாலில் வந்த குஷ் ரக போதைப்பொருளை கைப்பற்றிய பொலிஸார்!
                                    Mayoorikka
                                    
                            
                                        2 years ago
                                    
                                அமெரிக்காவில் இருந்து சூட்சுமமான முறையில் போதைப்பொருட்களுடன் விமான தபாலில் அனுப்பப்பட்ட பொதியொன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சுமார் 2 கோடி பெறுமதியான குறித்த போதைப்பொருள் பொதியை பெறுவதற்காக வருகைத்தந்திருந்த நபரை சுங்கப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைதான நபர் கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என குறிப்பிட்டனர்.
குறித்த பொதியில் குஷ் ரக போதைப்பொருள் 1.367 கிலோகிராம் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.