கனடாவில் வேகமாக பரவி வரும் தொற்று நோய் - நிபுணர்கள் எச்சரிக்கை

#Canada #people #Disease #Lanka4 #Warning #L4
Prasu
1 hour ago
கனடாவில் வேகமாக பரவி வரும் தொற்று நோய் - நிபுணர்கள் எச்சரிக்கை

கனடாவில் உன்னிகளின் நடமாட்டமும், அதனால் பரவக்கூடிய லைம் நோய்(Lyme disease) பாதிப்புகளும் அதிகரித்து வருவதாக தொற்றுநோய் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் நாடு தழுவிய ரீதியில் உன்னிகளின் நடமாட்டம் பற்றிய பதிவுகள் 38.5 சதவீதம் அதிகரித்துள்ளன.

கனடா பொது சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, கடந்த 2025ம் ஆண்டில் மட்டும் வரலாற்றிலேயே மிக அதிகமாக 7,105 லைம் நோய் பாதிப்புகள் பதிவாகியிருந்தன.

கனடாவில் அதிகளவில் உன்னிகள் அடையாளம் காணப்படும் ஒன்ராறியோ மாகாணத்தில், இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் 359 லைம் நோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

இதில் கடந்த வாரம் மட்டுமே 11 புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4