அமெரிக்காவில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் குடியரசு கட்சி வெற்றி

Kanimoli
3 years ago
அமெரிக்காவில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் குடியரசு கட்சி வெற்றி

அமெரிக்காவில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் (கீழ்சபை) மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும், செனட் சபையில் (மேல்சபை) 105 இடங்களில் 35 இடங்களுக்கும் கடந்த 8-ந் திகதி இடம்பெற்ற தேர்தலில் குடியரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.
2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் இந்த தேர்தல் முடிவுகள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது.
அதுமட்டுமின்றி ஜனாதிபதி ஜோ பைடனின் 2 ஆண்டு கால ஆட்சிக்கு மக்கள் அளிக்கிற சான்றிதழாகவும் இந்த தேர்தல் முடிவு அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்தநிலையிலேயே கடந்த 8-ந் திகதி இடம்பெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதில் ஜனாதிபதி ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சி செனட் சபையை கைப்பற்றியுள்ளது.
பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சியினர் சிறிய பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதிநிதிகள் சபையில் மொத்தம் உள்ள 435 இடங்களில் 218 இடங்களைக் கைப்பற்றினால் பெரும்பான்மை கிடைக்கும்.
இந்தநிலையில் டிரம்பின் குடியரசு கட்சி, பிரதிநிதிகள் சபையை கைப்பற்றி விடும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இந்த முடிவுகளை அடுத்து அடுத்த இரண்டு வருட கால கட்டம், ஜனாதிபதி ஜோ பைடனுக்கு சவால் மிக்க காலமாக அமையும் என்று எதிர்வுகூரப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4