கனமழை காரணமாக அம்பாறை மாவட்டம் பாதிப்பு!
Prabha Praneetha
2 years ago
-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1.jpg)
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை அக்கரைப்பற்று நிந்தவூர் நாவிதன்வெளி சம்மாந்துறை பிரதேச பகுதிகளில் வாழும் மக்கள் மழை வெள்ளம் காரணமாக சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்த மழை வெள்ளத்தின் காரணமாக இம்மாவட்டத்தின் பெரிய நீலாவணை பாண்டிருப்பு நற்பிட்டிமுனை சேனைக்குடியிருப்பு காரைதீவு சம்மாந்துறை அக்கரைப்பற்று பகுதிகளில் இப்பிரதேசத்தில் பல குடும்பங்கள் வெள்ளத்தினால் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளதுடன் தற்போது அங்குள்ள மக்கள் வீடுகளிற்குள் மழை வெள்ளம் உட்புகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு காரணம் மழை நீர் வழிந்தோடுவதற்குரிய முறையான வடிகால் இன்மையே முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டும் மக்களினால் முன்வைக்கப்பட்டுள்ளது.



