இன்றைய வேத வசனம் 05.11.2022: ஸ்திரீயானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருந்துஇ அமைதலோடு கற்றுக்கொள்ளக்கடவள்.

Prathees
1 year ago
இன்றைய வேத வசனம் 05.11.2022: ஸ்திரீயானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருந்துஇ அமைதலோடு கற்றுக்கொள்ளக்கடவள்.

பெண் என்பவள் வலிமையின் அம்சம். இந்த உலகை இயக்குவதற்கு தேவையான வலிமையை அளிக்கும் சக்தி படைத்தவளாக பெண் இருக்கிறாள். அறிவை வளர்க்கும் புனித இடமான கல்விக் கூடங்களில் பெரும்பான்மையினர் பெண்கள் தான்.

ஏனெனில், அவர்களுக்கு தான் பொறுமை அதிகம் என்று கல்வி நிர்வாகத்தினரால் தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றியும் பெறுகின்றனர்.

செவிலியர்கள். மருத்துவர்கள், விமானப்படை ஆகிய இடங்களில் சிரித்த முகத்துடன் வலம் வருவதில் பெண்களே அதிகம்.

இப்படி இயற்கையும், விஞ்ஞானமும், சுற்றுப்புறமும் பெண்களுக்கு தன்னிகரில்லாத ஆற்றலை தந்திருப்பதால் தான் பெண்களால் எல்லா நிலைகளிலும் நிற்கமுடிகிறது. 

இத்தகைய பல திறமைகளைக் கொண்ட பெண் சமூகத்தை இழிவுப்படுத்துமாறு பல குற்றங்கள் தீங்குகள் அவர்களுக்கு விரோதமாக இன்றைய கால கட்டத்தில் அதிகமாக எழும்பிவிட்டது.

பெண்களுக்கு விரோதமான குற்றங்களை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம். ஒரு சிறுகுழந்தையைக் கூட விட்டு வைக்காமல் அவர்களின் கற்பை சிதைத்து, உயிரை பிரிக்கும் அளவிற்கு வெறிச்செயலில் ஈடுபடும் கொடுரர்கள் இன்றும் தமிழகத்தில் சுற்றித்திரிகிறார்கள்.

பெண்கள் பாதுகாக்கப்பட சில வழிகள்..
1, மற்றவர்களை கவருமாறு அரைகுறை ஆடைகளை அணிவதை தவிர்க்கலாம் .
2, படிக்கும் மற்றும் வேலை ஸ்தலங்களில், மற்றவர்கள் உங்களைப் பார்க்கும்படி சத்தமாய் பேசுவதை தவிர்க்கலாம்.
3, மற்றவர்கள் கண்ணை பறிக்கும்படி நிறைய நகைகளை அணிவதை தவிர்க்கலாம்.
4, முன்பின் தெரியாதவரிடம் கைபேசி எண்ணை கொடுக்காதீர்கள்.
5, சமூக வலைதளங்களான Whatsapp, Facebook ஆகியவற்றை பயன்படுத்துவதில் கவனமாக இருங்கள்.
6, அதிக நேரம் கைபேசியில் பேசியே நேரத்தை வீணடிக்காமல் பெற்றோர் பிள்ளைகளாக பேசலாமே.
7, இரவில் பெண்கள் தனியே வெளியே செல்வதை தவிர்க்கலாம்.
8, தெரியாத நபர்களை வீட்டிற்குள் அனுமதிக்காதீர்கள்.
9, பெற்றோர் அனுமதி இல்லாமல் நண்பர்களோடு பிரயாணம் செய்யாதீர்கள்.
10, மற்றவர்களைப் பார்த்து எந்த காரியத்தையும் செய்வதை தவிர்த்து. நம் மனதில் எது சரியென்று தோன்றுகிறதோ அதை ஆராய்ந்து செயல்பட வேண்டும். 

அருமையான பெண்களே! வேதம் கூறியுள்ளபடி பெண்ணுக்குரிய அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள குணங்களை உள்ளடக் கியவர்களாய் வாழ்ந்து, வாழ்வில் வரும் தடைகற்களை படிகற்களாய் மாற்றி முன்னேறிச் செல்ல எங்கள் வாழ்த்துக்களும்! ஜெபங்களும்!

தீமோத்தேயு 2:9:11
ஸ்திரீகளும் மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது தங்களை அலங்கரியாமல்,
தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்கவேண்டும்.
ஸ்திரீயானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருந்து, அமைதலோடு கற்றுக்கொள்ளக்கடவள்.