இலங்கைக்கு 'இந்தியா எப்போதும் ஒரு சிறந்த நண்பான இருக்கும்' - இந்திய தூதுவர் கோபால் பாக்லே

Kanimoli
3 years ago
இலங்கைக்கு 'இந்தியா எப்போதும் ஒரு சிறந்த நண்பான இருக்கும்' - இந்திய தூதுவர் கோபால் பாக்லே

இலங்கைக்கு 'இந்தியா எப்போதும் ஒரு சிறந்த நண்பான இருக்கும்' எனவும் 'கேட்காமலே உதவிகளை தொடர்ந்தும் வழங்கும்' எனவும் இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையக திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய இலங்கைக்கான இந்திய தூதுவர், இந்திய வம்சாவளி தமிழ் தலைவர்கள் இந்தியாவிற்கு வருகை தர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “மலையக மக்கள் இந்தியாவுடன் மிகவும் பலமான தொடர்புகளை கொண்டுள்ளனர்.

இந்தியாவுடன் நட்புறவு மற்றும் உறவுகளை பேணுவதற்கும் மலைய மக்கள் பங்களிப்பு வழங்குகின்றனர். இந்தியாவும் உங்களை மறக்காது. இந்தியா உங்களை எந்த நேரத்திலும் நினைவில் வைத்திருக்கும் .

நாங்கள் இங்கு வந்ததில் இருந்து இலங்கை மக்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றோம். இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் தொடர்பில் இந்திய மக்கள் அறிவார்கள். இந்திய மக்கள் இலங்கையிலுள்ள சகோதர சகோதரிகளுக்கு எப்போதும் ஒத்துழைப்பு வழங்குவார்கள்.

குறிப்பாக இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவார்கள். இளம் பிள்ளைகள், சிறுவர்கள், மற்றும் தாய்மாருக்கான பால்மாவை வழங்குவதற்கும் இந்தியா தயாராக உள்ளது.

கேட்காமலேயே நண்பன் செய்வதை போன்று இந்தியாவும் உதவி வழங்கும். உங்களின் நண்பாக இந்தியா இருக்கும் என நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்.

ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளும் பிரவாசி பாரதிய திவாஸ் கொண்டாடப்படுகின்றது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்திய வம்சாவளி தமிழ் தலைவர்கள் இந்தியாவிற்கு வருகை தர வேண்டும்” என்றார்.    

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4