சப்ரகமுவ பல்கலைக்கழக விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட மாணவன்

Prathees
3 years ago
சப்ரகமுவ பல்கலைக்கழக விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட மாணவன்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்கும் பல்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய மாணவன் இன்று அதிகாலை பல்கலைக்கழக விடுதியில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இதுவரை இடம்பெற்றுள்ள நிலையில், மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

உயிரிழந்த மாணவரும் பல்கலைக்கழகத்தின் கபடி அணியில் அங்கம் வகித்தவர் என பல்கலைக்கழக மாணவர் நலன்புரி பணிப்பாளர் பேராசிரியர் மனோஜ் ஆரியரத்ன தெரிவித்தார்.

சடலம் தற்போது பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4