தற்போதைய நெருக்கடியிலிருந்து இலங்கையை மீட்பதற்கு மிகவும் பொருத்தமானவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
Kanimoli
2 years ago

தற்போதைய நெருக்கடியிலிருந்து இலங்கை மீட்பதற்கு மிகவும் பொருத்தமானவர் சமகால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவரை ஆதரிக்கும் ஒரு சக்தி அவரிடம் உள்ளதென அமெரிக்க அதிகாரி ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.
தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியை சந்தித்த போதே அதனை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டு வரும் முயற்சிகளை அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லு பாராட்டியுள்ளார்.



