பஸில் ராஜபக்சவுக்கு பிரதமர் பதவி தகவலில் உண்மை இல்லை - பந்துல குணவர்தன

Kanimoli
3 years ago
 பஸில் ராஜபக்சவுக்கு பிரதமர் பதவி தகவலில் உண்மை இல்லை - பந்துல குணவர்தன

  முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கு பிரதமர் பதவி வழங்கப்படவுள்ளதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை என அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது.

இதன்போது, பஸில் ராஜபக்ச நாடு திரும்பிய பின்னர், அவரை பிரதமராக்குவதற்கு முயற்சிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த தகவல் உண்மையா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே, அமைச்சர், இக்கூற்றை நிராகரித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4