மருமகனுக்கு இறைச்சியில் சிம்கார்ட்டை மறைத்துச் சென்ற நபர் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது

Prathees
2 years ago
மருமகனுக்கு இறைச்சியில் சிம்கார்ட்டை மறைத்துச் சென்ற நபர் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது

அகுனுகொலபலஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவரை பார்க்க சென்ற நபர் ஒருவர் இறைச்சித் துண்டில் இரண்டு சிம்கார்ட்களை  மறைத்து வைத்து இருந்தமை  சிறைச்சாலை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சூரியவெவ வெனிவெலர பிரதேசத்தை சேர்ந்த 48 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறையில் இருக்கும் தனது 29 வயது மருமகனுக்கு இந்த சிம்காட்களை கொண்டு வந்தார்.

அகுனுகொலபலஸ்ஸ சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவரை பார்ப்பதற்காக நேற்று வந்த நபர் ஒருவர் கொண்டு வந்த உணவுப்பொதியை சிறைச்சாலை அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.

அங்கு உணவில் இருந்த பெரிய இறைச்சித் துண்டின் மீது கவனம் செலுத்தப்பட்டு, அது முழுமையாக ஆராயப்பட்டுள்ளது.

கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சிம்கார்ட்களும் அங்கு கண்டெடுக்கப்பட்டதுடன், சந்தேகநபர் நேற்று அகுனுகொலபலஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!