சிறிலங்காவை முன்னோக்கி நகர்த்துவதற்கு இடமளிக்காமல் பலவந்தமாக நிகழ்ச்சி நிரலில் வைத்திருகிறோம் - அலி சப்ரி

Kanimoli
3 years ago
சிறிலங்காவை முன்னோக்கி நகர்த்துவதற்கு இடமளிக்காமல் பலவந்தமாக நிகழ்ச்சி நிரலில் வைத்திருகிறோம் - அலி சப்ரி

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை சிறிலங்காவை முன்னோக்கி நகர்த்துவதற்கு இடமளிக்காமல் பலவந்தமாக நிகழ்ச்சி நிரலில் வைத்திருப்பதாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கடுமையாக சாடியுள்ளார்.

 அதேவேளை ஐ.நா ஆணையாளர்களின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பொருளாதார குற்றங்கள் என்ற சொல்லை சிறிலங்கா ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

“ஐ.நா மனித உரிமைகள் பேரவை நாட்டின் உள்விவகாரங்களில் தேவையில்லாமல் தலையிடுகின்றது.

நாட்டின் பொருளாதார குற்றங்களுக்கு யாரேனும் பொறுப்புக் கூறினால் அவர்கள் மீது நாட்டின் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்து சிறிலங்காவிற்கு கல்வி கற்பிப்பதற்கான நிபுணத்துவம் மனித உரிமைகள் பேரவைக்கு இருந்தாலும் அது குறித்து சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் நிபுணர்களுடன் சிறிலங்கா கலந்துரையாடி வருகின்றது” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4