தீவு அபிவிருத்தி அதிகாரசபை எனும் புதிய நிறுவனம் அமைக்கப்படவுள்ளது!

Mayoorikka
3 years ago
தீவு அபிவிருத்தி அதிகாரசபை எனும் புதிய நிறுவனம் அமைக்கப்படவுள்ளது!

இலங்கை தீவுகள் அபிவிருத்தி அதிகாரசபை என்ற புதிய நிறுவனம் நிறுவப்படவுள்ளது. நாடெங்கிலும் அமைந்துள்ள தீவுக் கூட்டத்தை அபிவிருத்தி செய்து நாட்டின் பொருளாதாரத்தை வினைத்திறனாகப் பயன்படுத்தும் நோக்கில் இந்தப் புதிய அதிகாரசபை ஸ்தாபிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை தீவு அபிவிருத்தி அதிகாரசபையை அமைப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


உலகின் பல நாடுகளில் அமைந்துள்ள தீவுகளின் பொருளாதார வாய்ப்புகள்; மதிப்பீடு செய்யப்பட்ட போதிலும் இலங்கையைச் சூழவுள்ள சிறிய தீவுகளின் பொருளாதார வாய்ப்புகள் இதுவரை சரியாக மதிப்பிடப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது நமது நாடு பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றது. எனவே, நாட்டைச் சூழவுள்ள தீவுகளை அபிவிருத்தி செய்து பொருளாதாரத்திற்கு மிகவும் பயனுள்ள வகையில் பயன்படுத்துவதன் மூலம் அந்த நெருக்கடிகளுக்குத் தீர்வு காண முடியும் எனவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4